7 வழக்குகளுக்கான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை !



7 வழக்குகளுக்கான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் ​போதே அவர் இதனைக் குறிப்பிட்டனார்.

2015 சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், தினேஷ் ஷாப்டர் மரணம் உள்ளிட்ட 7 வழக்குகளுக்கான விசாரணைகளையே இவ்வாறு துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.