தங்கல்ல பிரதேச சபை முன்னாள் உப தலைவர் அமில் அபேசேகரவினால் பெலியத்த, புவக்தண்டாவ வீரசிங்க வீதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப் வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே மேற்படி வாகனம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1997 துரித இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, பெலியத்த, கொஸ்கஸ்லந்த பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சைனா ஹாபர் இன்ஜினியரிங் கம்பனிக்கு சொந்தமான கறுப்பு நிற Land Cruiser ஜீப் ஒன்றையும் பெலியத்த பொலிஸார் கைப்பற்றினர்.