எதிர்வரும் 23ஆம் திகதி கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் !



கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியம்  மற்றும் அதனையொட்டிய வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்க பகுதியானது (Low Pressure Area), மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (21.10.2024) காலை (11.30am) கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நன்கமைந்த தாழமுக்க தகுதியாக (Well Marked Low Pressure Area) வலுவடைந்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, நாளை காலை ஒரு தாழமுக்கமாக மேலும் வலுவடையும்.

இதன் பின்னர் இது எதிர்வரும் 23ஆம் திகதி கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு சூறாவளியாக (Cyclonic Storm) மேலும் வலுவடையும்.

இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Qutar நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட DANA எனும் பெயர் புது டெல்லியில் உள்ள இதற்கு RSMC (Regional Specialized Meteorological Centre) இனால் வழங்கப்படும்.

அதன்பின்னர் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வட மேற்கு  வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு அப்பால் Odisha - West Bengal கரையை எதிர்வரும் 24ஆம் திகதி காலை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது மேலும் தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்து North Odisha -West Bengal கரைப்பகுதியை Puri விற்கும் Sagar Island இடையில் எதிர்வரும் 24ஆம் திகதி இரவு அல்லது 25ஆம் திகதி அதிகாலை ஒரு வலுவான சூறாவளியாக (Severe Cyclonic Storm) ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் வீசும் காற்றின் வேகமானது மணிக்கு 100km/h - 110km காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


க.சூரிய குமாரன்,
முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி.