2024 ஆம் ஆண்டில் இதுவரை 1,540,161 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை !



2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,540,161 ஆகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் 13 நாட்களில் 55,353 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் அதில் 29.2% சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

இது தவிர, சீனாவில் இருந்து 3,963 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 3,926 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 3,469 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர் என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.