கரடியனாறு பொலிஸ் பிரிவில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 எருமை மாடுகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்,
இதேவேளை கடந்த வியாழக்கிழமை (10) வெல்லாவெளி பிரதேசத்தில் 3 பசுமாடுகளும், நேற்று வெள்ளிக்கிழமை (11) ஒரு பசுமாடு உட்பட 4 மாடுகளும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பிரிவில் 3 பசுமாடுகளும் காணமல் போயுள்ளன.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.