இணையத்தள நிதி மோசடி 120 சீன பிரஜைகள் கைது !


இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் அடங்கிய குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி குண்டசாலையில் உள்ள 47 அறைகள் கொண்ட சொகுசு பங்களா ஒன்றில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளிடம் இருந்த 15 கணினிகள் மற்றும் 300 கைடயக்க தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.