உலகின் மிகப்பெரிய கொள்கலன் சரக்குக் கப்பலான EVER ARM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
400 மீற்றர் நீளம் கொண்ட EVER ARM சுமார் 24,000 TEU (20 அடி கொள்கலன்) சுமக்கக் கூடிய இக் கப்பலை ஆசியாவின் ஒரு சில துறைமுகங்களால் மட்டுமே கையாளமுடியும். அந்த வரிசையில் கொழும்பு துறைமுகமும் அந்த சிறப்பை கொண்டுள்ளது.
ஆழ் கடல் முனையமாக கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்பட்டு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தியதனால் இச் சாதனையை இலங்கை வசப்படுத்த முடிந்துள்ளதுதுறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.