ரவூப் ஹ‌க்கீம் என்பவர் முஸ்லிம் ச‌மூக‌த்தின் துரோகி : உல‌மா க‌ட்சி !


(பாறுக் ஷிஹான்)


அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.எனவே இதற்கான தெளிவான பதிலை சஜித்துடனுள்ள ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கவேண்டுமென ஸ்ரீல‌ங்கா உல‌மா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமகால அரசியல் தொடர்பாக ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் - முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

ரவூப் ஹ‌க்கீம் என்பவர் முஸ்லிம் ச‌மூக‌த்தின் துரோகி என்று 2001 முத‌ல் ப‌கிர‌ங்க‌மாக‌ சொல்லி வ‌ருகிறேன்.2001ல் அதாவுள்ளாவும் ஹ‌க்கீமுட‌ன்தான் இருந்தார்.அப்போதெல்லாம் எங்களை தூற்றிய‌ பழைய‌ , புதிய முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இப்போது ஹ‌க்கீமை தூற்றுகிறார்க‌ள்.எனினும் உண்மை மிக‌ தாம‌த‌மாக‌த்தான் புரிய‌ வ‌ரும்.அது போன்று தான் முஸ்லிம் காங்கிர‌ஸ் போன்ற‌ திருட்டு க‌ட்சிக்கார‌ர்க‌ளை சேர்க்க‌மாட்டோம் என‌ ஜேவிபி அநுர‌குமார‌ பேசி வ‌ந்தார்.ஆனால் இப்போது அதாவுல்லாவின் க‌ட்சியில் மாகாண‌ ச‌பை உறுப்பின‌ராக‌ இருந்து பின்ன‌ர் முஸ்லிம் காங்கிர‌ஸ் கட்சியில் சேர்ந்து அத‌ன் த‌லைமை நிர்வாக‌த்தில் இருந்த‌ ஒருவ‌ரை தேசிய‌ ம‌க்க‌ள் ச‌க்தி த‌ன்னோடு இணைத்துக்கொண்டுள்ள‌தாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அவ்வாறாயின் ஏமாற்று க‌ட்சியில் இருந்து கொண்டு ச‌மூக‌த்தின் வாக்குக‌ளை விற்று சுக‌ போக‌ம் அனுப‌வித்த‌ க‌ட்சியின் அனைத்து செய‌ல்க‌ளுக்கும் துணை போய் விட்டு இப்போது க‌ட்சி மாறினால் ந‌ல்ல‌வ‌ரா? இப்ப‌டியான‌வ‌ர்க‌ளை தேசிய‌ ம‌க்க‌ள் ச‌க்தியில் இணைப்பதன் மூல‌ம் தற்போது அநுர‌குமார‌ த‌ன் கொள்கையிலிருந்து வில‌கி திருட‌ர்க‌ளை இணைக்காம‌ல் வெற்றியைப்பெற‌ முடியாது என்ற‌ நிலைக்கு வ‌ந்துள்ளாரா?என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.இது தவிர இதைத்தான் நாம் சொல்கிறோம் மாற்ற‌ம் என்ப‌து ஆட்க‌ளை மாற்றுவ‌தால் ஏற்ப‌டாது, ந‌ல்ல‌ அர‌சிய‌லை உருவாக்கும் ம‌ன‌ மாற்ற‌ம் ம‌க்க‌ள் ம‌ன‌திலும் அர‌சிய‌ல்வாதிக‌ள் உள்ள‌த்திலும் வ‌ர‌வேண்டும்.பாத்திர‌ங்க‌ள் வேறுஇ க‌ள்ளு ஒன்றுதான்.என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் ம‌ஹிந்த‌ ராஜபக்சவின் க‌ட்சி செய‌லாள‌ராக‌ இருந்த‌ மைத்திரி பெல்டி அடித்த‌தும் அவ‌ர் ந‌ல்ல‌வ‌ராகிவிட‌ மாட்டார் என‌ அப்போதே சொன்ன‌ ஒரேயொரு முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சியாகும். ஆனால் இல்லையில்லை என‌ முஸ்லிம் ச‌மூக‌ம் ம‌றுத்து செத்துப்போன‌வ‌னும் வ‌ந்து மைத்திரிக்கு ஓட்டுப்போட்டான். க‌டைசியில் ம‌ஹிந்த‌ ஆட்சியைவிட‌ மோச‌மான‌து ஹ‌க்கீம் ரிசாத் த‌மிழ் கூட்ட‌மைப்பு முட்டுக்கொடுத்த‌ மைத்திரி ஆட்சி என்பது எல்லோரும் அறிந்த உண்மை.மேலும் ஒரு க‌ட்சியில் இருந்து சுக‌ போக‌ம் அனுப‌வித்து விட்டு ச‌ந்த‌ர்ப்ப‌த்துக்கு க‌ட்சி மாறுப‌வ‌ன் நிச்ச‌ய‌ம் பெரும் மோச‌டிக்கார‌ன். இப்ப‌டியான‌ இன்னும் ப‌ல மோச‌டிக்கார‌ர்க‌ள் தேசிய‌ ம‌க்க‌ள் ச‌க்தியில் (ஜேவிபி) இணைந்து மீண்டும் மைத்திரி ஆட்சி போல் திருட்டு ஆட்சியே ஏற்ப‌டும் என அவர் மேலும் தெரிவித்தார்.