ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையாளர் சமன் ரத்நாயக்க ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்துக்கு விரோதமானது மட்டுமன்றி நெறிமுறையற்ற செயற்பாடுகளாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே பொதுமக்கள் தாங்களாகவே முடிவு செய்ய வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பள திருத்தம் தொடர்பான அரசின் அண்மைய அறிவிப்பு தொடர்பாக கவலை தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், அது தற்போது நடைபெற்று வரும் தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.