சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது !


கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலுக்கு அமைவாக குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் 2 ஆயிரத்து 613 லிற்றர் கோடா மற்றும் 24 லீற்றர் கசிப்பும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.