அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை சுற்றறிக்கையின் ஊடாக வெளிப்படத்தப்பட வேண்டுமென, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
எமக்குரிய சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி, பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்தோம். வீதியிலிறங்கி போராடினோம்.அப்போது எம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எமது கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்தது. இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்க அரச ஊழியர்களின் மீது, திடீர் கருணை பிறந்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக, ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். தபால்மூல வாக்குகளைப்பெற்றுக் கொள்ளும் நோக்கில்அவர் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா என்ற சந்தேக் ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் மீத உண்மையான அக்கறை இருந்தால் சம்பள அதிகரிப்பை சுற்றறிக்கையினூடாக வெளிப்படுத்துமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.