இதன்போது தீயை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதை பார்த்த வீட்டார் தீயினை அணைக்க முயன்றபோது, வாகனங்களின் உரிமையாளரினது தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.