இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து - ஒருவர் பலி !


இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று இரவு 8.00 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மற்றைய நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.