இன்று மாலை புகையிரத விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் ராணி புகையிரத்தில் மோதிய குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் கிளிநொச்சி உமையாள்புரத்தைச் சேர்ந்த 58 வயதான சுப்பையா சாந்தகுமார் என்பரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.