பொலன்னறுவையில் விபத்து ; இந்திய பிரஜை பலி ; 7 பேர் காயம் !



பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தில் நேற்று (06) இரவு இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவையிலிருந்து மின்னேரியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சாரதி உட்பட ஏழு பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக நடவடிக்கைளுக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த வர்த்தகர்கள் சிலரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் இன்று (07) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.