மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு விழா !

(எஸ். சதீஸ் )

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கன்னங்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை 01 ம் திகதி  மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியிலும் விளையாட்டுக்களிலும் சாதனை படைத்து வரும் கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது பாடசாலை தினத்தை முன்னிட்டு நடைபவனி ஓன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றது.

பாடசாலையின் அதிபர் தங்கராசா கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பாடசாலை தினத்தை நினைவு கூறும் வகையில் 135 வது ஆண்டு விழா கேக் வெட்டப்பட்டு, அதனைத் தொடர்ந்து நடை பவனியானது ஆரம்பமாகியது.

இந்நடைபவனி கன்னங்குடா ஊர் ஊடாக சென்று தொடர்ந்து மண்டபத்தடி வழியாக கரையாக்கந்தீவு, தாண்டியடி, படுத்திச்சேனை , குறிஞ்சாமுனை சென்று மீண்டும் கன்னங்குடா பாடசாலையை வந்தடைந்தது.

இதன் போது பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள், பாடசாலை நலன் சாரஎந்த அமைப்புக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இந்நடைபவனியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாகவும் சுற்றாடல் பாதுகாப்பு, கலை கலாசாரம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை பற்றி விழிப்புணர்வூட்டும் பதாதைகள் மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டதுடன், கலை கலாசார நிகழ்வுகளை பிரதிபலிக்கும் மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் இடம்பெற்ற இந் நடைபவனியில் வாகன பேரணியும் இடம் பெற்றிருந்தது..

பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக இடம் பெற்ற பாடசாலை தின நடைபவனியில் பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அதிபர்கள் மற்றும் கொடையாளிகள் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் காட்சிப்படுத்த்தப்பட்டிருந்தாமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இதே தினம் பாடசாலை மண்டபத்தில் கெளரவிப்பு நிகழ்வும் இடம் பெற்றது .