இந்தியாவின் Women ICON சர்வதேச நிறுவனத்தின் “Process Innovation in IT” எனும் விருதினை பெற்றுக்கொண்டார் மட்டக்களப்பைச் சேர்ந்த ஹட்சனா கமலநாதன் !




இந்தியாவின் Women ICON சர்வதேச நிறுவனத்தினால் ஆண்டு தோறும் நடாத்தப்படும் விருது வழங்கும் நிகழ்வில் பல்வேறு துறைகளில் பல்வேறுபட்ட சாதனைகளினை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகின்றது. இதன் அடிப்படையில் 2024ம் விருது வழங்கல் நிகழ்வு அண்மையில் இந்தியா திருச்சியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் 2024ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஹட்சனா கமலநாதன் தகவல் தொழில்நுட்ப பிரிவில் “Process Innovation in IT” எனும் விருதினை பெற்று எமது நாட்டிற்கும் எமது மட்டக்களப்பு பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவ் விருது வழங்கும் நிகழ்வில் பல்வேறு நாட்டினைச் சேர்ந்த சாதனைப் பெண்களுக்கு பல்வேறு துறையினில் விருதுகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில் ஹட்சனா கமலநாதன் தகவல் தொழில்நுட்ப துறை பிரிவில் விருதினைப் பெற்றிருந்தார்.

இவர் உலகின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Microsoft நிறுவனத்தின் பயிற்சியாளர்களின் இலங்கைக்கான தலைவராக (Microsoft MCT Regional Lead) உள்ளதுடன், மற்றும் IFS நிறுவனத்தில் DevOps Engineer ஆக பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.