ஆசிரியர் அருணாசலம் ஆனந்தராசா மாணவர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கும் போது காலமானார்.

(சித்தா)
தம்பலவத்தையை பிறப்பிடமாகவும், களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட பட்டிருப்பு கல்வி வலயத்தில் மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக கடமையாற்றிய அருணாசலம் ஆனந்தராசா ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்த வேளையில் இதயம் தவறியதால் திடீரென மயக்கமுற்றார் இதனை மாணவர்கள் சக ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்தவும் விரைவாக செயற்பட்ட ஆசிரியர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது  காலமானார். இவரின் இழப்பு இப் பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.