Article - பாடசாலைச்‌ சட்ட திட்டங்களும்‌ மாணவர்களின்‌ சமூகமயமாக்கலும்‌.



பாடசாலைச்‌ சட்ட திட்டங்களும்‌ மாணவர்களின்‌ சமூகமயமாக்கலும்‌.


பாடசாலை சட்ட திட்டம்‌ என்பது மாணவர்களின்‌ ஒழுக்கத்தையும்‌, விழுமியங்களையும்‌, ஆளுமையையும்‌ விருத்தி செய்து அறிவுசார்‌ விருத்தியில்‌ மாத்திரமில்லாது திறன்‌ பண்புசார்‌ விருத்தியிலும்‌ மேல்நிலை அடையச்‌ செய்யும்‌ அனைத்து விதமான விதிமுறைகளும்‌ பாடசாலை சட்ட திட்டம்‌ எனப்படும்‌.

பாடசாலை ஆரம்பமாகி நிறைவடையும்‌ வரையிலான அனைத்து விதமான செயற்பாடுகளும்‌ பாடசாலை சட்டதிட்டத்திற்குள்‌ அடங்கும்‌ விடயமாகும்‌.

இலங்கை பாடசாலையில்‌ சட்ட விதிமுறைக்கு அமைய பிள்ளைகளை ஆறு வயது முதல்‌ பாடசாலையில்‌ இணைத்துக்‌ கொள்கின்றனர்‌. அவ்வாறு நினைந்துக்‌ கொண்டதில்‌ இருந்து பாடசாலை சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்‌ என்ற விடயமும்‌  முக்கியமானதாகும்‌.

இவ்வாறு இணைந்து கொண்ட மாணவர்கள்‌ பாடசாலை சட்ட திட்டங்களை பின்பற்றி  எவ்வகையான முறையில்‌ சமூகத்திற்கு ஏற்ற நற்‌ பிரஜைகளாகவும்‌, சமூகம்‌ வேண்டத்தக்க வகையில்‌ சமூகமயமாக்கல்‌ செயல்முறையினையும்‌ பாடசாலை சட்ட திட்டங்கள்‌ மாணவர்களை சமூகமயமாக்கம்‌ செய்கின்றது என்பதை ஆராய்வோம்‌.

அந்த வகையில்‌ சமூகமயமாக்கல்‌ என்பது சமூகத்தினுடைய மாற்றங்களுக்கு ஏற்ப இசைவாக்கம்‌ அடைதல்‌ சமூகமயமாக்கல்‌ என சுருக்கமாக வரைவிலக்கணப்படுத்தலாம்‌.

பாடசாலை சட்டதிட்டங்கள்‌ மாணவர்களை சமூகமயப்படூத்துவதில்‌ பாடசாலை சமூகத்துடன்‌ இணைந்து பெரும்‌ பங்கு வகிக்கும்‌ ஒரு விடயமாகும்‌.

பாடசாலை சட்ட விதிமுறைகளுக்குள்‌ மாணவர்‌ ஒழுக்க கோவை சிறப்பான இடம்‌ வகிக்கின்றது. இதில்‌ மாணவர்கள்‌ பாடசாலை மற்றும்‌ பாடசாலை விட்டு வெளியிடங்களில்‌ எவ்வாறான ஒழுக்க விதிமுறைகளின்‌ படி நடந்து கொள்ள வேண்டும்‌. அதேபோல்‌ எந்த இடத்தில்‌ எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்‌ என்பதை சுட்டிக்‌ காட்டுவதாக அமையும்‌ மாணவர்‌ ஒழுக்க கோவை மாணவர்களை சமூகமயப்படூத்துவதில்‌ முதற்‌ பங்கினை வகிக்கின்றது.

பாடசாலையில்‌ நேர முகாமைத்துவத்திற்கு முக்கியத்துவம்‌ கொடுத்து அதனை பின்பற்றியே அனைத்து விடயங்களும்‌ நடைபெறுகின்றது. இதனால்‌ வாழ்க்கையில்‌ நேரத்தின்‌ பெறுமதியை அறிந்து அதற்கேற்ப வேலைகளை திட்டமிட்டு உரிய நேரத்திற்குள்‌ செய்து முடிக்கும்‌ மனப்பக்குவ நிலையை அடைந்து கொள்கின்றனர்‌.

பாடசாலையில்‌ சமத்துவம்‌ என்ற நிலையினை வளர்த்துக்‌ கொள்வதற்கும்‌, வாழ்க்கையில்‌ ஒற்றுமையாகவும்‌, சமாதான மனப்பாங்குடனும்‌ வாழ்வதற்கு இங்கு இலவச சீருடை, பாட புத்தகம்‌ போன்றவற்றை அரசாங்கம்‌ வழங்கி மாணவர்கள்‌ அனைவரையும்‌ ஒரே சமூகமாக ஒன்றிணைவதில்‌ கரிசனை கொண்டுள்ளது.

பல்வேறு சமூகங்களில்‌ இருந்து வருகை தரும்‌ மாணவர்கள்‌ பல்வேறு பழக்க வழக்கங்களைக்‌ கொண்டவர்களாக காணப்படுவர்‌. அவர்களை ஒன்றிணைத்து ஒருமைப்பாட்டினை ஏற்படூத்துவதில்‌
பாடசாலை சட்ட திட்டங்கள்‌ பங்கு கெள்கின்றது.

பாடசாலைகளில்‌ நடைபெறும்‌ இணைப்‌ பாடவிதான செயற்பாடுகள்‌, விழாக்கள்‌ போட்டி நிகழ்வுகள்‌ அனைத்தும்‌ மாணவர்களின்‌ மனநிலையில்‌ வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொண்டு
அவர்களுக்கு ஏற்படும்‌ பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டூ தாமாக சமாளிக்கும்‌ ஆற்றலினை வலுப்படுத்துவதிலும்‌, சமாதானத்தையும்‌ ஒற்றுமையையும்‌ கட்டி எழுப்புவதில்‌ இவை துணை நிற்கின்றது.

இன்றைய சிறுவர்கள்‌ நாளைய தலைவர்கள்‌ என்ற அடிப்படையில்‌ பாடசாலைகளே நாளைய தலைவர்களை உருவாக்குகின்றது. அதாவது சாரணியர்‌ இயக்கம்‌, மாணவர்‌ பாராளுமன்றம்‌,
மாணவத்‌ தலைவர்கள்‌, வகுப்புத்‌ தலைவர்கள்‌ என பொறுப்புக்களை வழங்கும்போது தானாகவே நாளைய உலகிற்கு தலைவர்கள்‌ உருவாக கூடிய சூழ்நிலையை பாடசாலை சட்டதிட்டங்கள்‌
அமைத்துக்‌ கொடுக்கின்றன. எனவே தான்‌ நாளைய உலகிற்கு எவ்வாறான சமூகமயப்படுத்தப்பட்ட தலைவர்கள்‌ தேவை என்பதனை அறிந்து அதற்கேற்ப பாடசாலைகள்‌ சமூகத்தை அறிந்த நல்ல தலைவர்களை உருவாக்குகின்றது.

இலங்கை பாடசாலைகளில்‌ கலைத்திட்ட வடிவமைப்புக்கு ஏற்ப பாடங்கள்‌ கற்பிக்கப்படுகின்றன. இந்த கலைத்திட்டத்தில்‌ நோக்கமாக நாளைய நவீன உலகிற்கு சமூகம்‌ ஏற்றுக்கொள்ளக்கூடிய நற்பிஜைகளை உருவாக்குவதாகவே அமைகின்றது.

இந்த கலைத்திட்டத்தின்‌ ஊடாக மாணவர்கள்‌ அனைத்து விதத்திலும்‌
சமூகநிலைப்படூத்துவதற்கு ஒவ்வொரு தேர்ச்சி மட்டங்களை கொண்டு பாடங்கள்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒழுக்கம்‌

மற்றும்‌ விழுமியம்சார்‌ கல்விக்கு சமய பாடமும்‌, ஆரோக்கிய வாழ்விற்கு சுகாதாரமும்‌ உடற்கல்வியும்‌, சிந்தனைகளை கிளறுவதற்கும்‌ பிரச்சினைகளை தீர்ப்பதற்கும்‌ கணித விஞ்ஞான
பாடங்களும்‌, அனுபவங்களைப்‌ பெற்றுக்‌ கொள்வதற்கு செயல்முறைசார்‌ பாடங்களும்‌, தொழில்‌ உலகிற்கு நுழைவதற்கு ஏற்ப தொழில்நுட்ப பாடங்களும்‌, மொழி அறிவினை பெற்றுக்‌ கொள்வதற்கும்‌ சமூகத்துடன்‌ இணைந்து கொள்வதற்கும்‌ பிற சமூகத்தினை மதிக்கவும்‌ தமிழ்‌, ஆங்கிலம்‌, சிங்களம்‌, போன்ற பாடங்களும்‌, கடந்த கால மனிதனுடைய வாழ்க்கை முறை நாகரிகம்‌ போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு வரலாற்று பாடங்களும்‌ பாடசாலை கலைத்திட்டத்தின்‌ ஊடாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பாடசாலைகளில்‌ நடைபெறும்‌ கலாசார நிகழ்வுகள்‌ மாணவர்களை சமூக நிலைப்படூத்துவதில்‌ முக்கிய பங்கு வகிக்கின்றது. உதாரணமாக வாணி விழா, மீலாத்‌ விழா, பொங்கல்‌ விழா, ஆண்டு விழா போன்ற விழாக்களினை நடத்துவதனால்‌ பிற மதங்களின்‌ சம்பிரதாயங்கள்‌ நடைமுறைகளை அறிந்து கொள்ளக்‌ கூடியதாக அமையும்‌. இதனால்‌ மாணவர்கள்‌ பாடசாலையை விட்டு வெளியில்‌ சென்றாலும்‌ பிற சமூகங்களை ஏற்று ஒற்றுமையுடன்‌ வாழ வழி
ஏற்படுகின்றது.

பாடசாலைகளில்‌ வருடம்‌ தோறும்‌ சுற்றுலா களப்பயணங்களை திட்டமிட்டு கொண்டூ செல்கின்றபோது மாணவர்கள்‌ பாட புத்தகங்களில்‌ வாசித்து அறிந்த விடயங்களை நேரில்‌ பார்வையிடும்‌ பொழுது அவை மிகவும்‌ பயனுள்ள விடயமாகவும்‌ புதிய விடயங்களைக்‌ கண்டூ கொள்ளவும்‌ வாய்ப்புக்‌ கட்டுகின்றது. அதோடூ பல்வேறு வகையான புதிய சமூகங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும்‌ சுற்றுலா களப்பயணங்களை திட்டமிட்டு கொண்டு செல்கின்ற செயற்பாடுகளின்‌ மூலம்‌ பெற்றுக்கொள்ள முடிகின்றது.

இலங்கை பாடசாலை சட்டதிட்டங்களுக்கு அமைய தரம்‌ 1 தொடக்கம்‌ 13 வரையான வகுப்புகள்‌ காணப்படுகின்றன. 06 தொடக்கம்‌ 19 வயது வரையான காலப்‌ பகுதியில்‌ ஒருவர்‌
வெளிச்‌ சமூகம்‌ விரும்புகின்ற அனைத்து திறன்‌, மனப்பாங்கு என்பவற்றை பெற்று மனிதனாக இணைந்தவர்களை சாதனை உள்ள மாமனிதராக சமூகத்திற்கு ஏற்ற சமூகமயமாக்கப்பட்ட ஒருவரை வழங்குகின்றது என்பதில்‌ எந்தவித ஐயப்பாடும்‌ இல்லை.

எனவே தொட்டில்‌ பழக்கம்‌ சுடுகாடு வரைக்கும்‌ என்பதற்கு இணங்க சிறு வயதில்‌ இருந்தே பாடசாலையும்‌ பாடசாலை சட்டதிட்டங்களும்‌ ஒருவரை சமூகமயமாக்கி சமூக தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையிலும்‌ வளப்படுத்துகின்றது.




முத்துக்குமார்‌. ரகுவரன்‌
நான்காம்‌ வருட கல்வியியல்‌
சிறப்புக்‌ கற்கை மாணவன்
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப்‌ பல்கலைக்கழகம்‌