வன விலங்குகளுக்கு தீங்கு ஏற்படுத்தப்பட்டால் 1992 எனும் துரித இலக்கம் மூலம் தகவல் வழங்கவும் !


வன விலங்குகளுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுத்தப்பட்டால் அது குறித்து 1992 எனும் துரித இலக்கம் மூலம் தகவல் வழங்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.அத்துடன், சட்டவிரோத மின் கம்பிகளில் சிக்குண்டு வன விலங்குகளும் மனிதர்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளுக்கு மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, வன விலங்குகள் தொடர்பில் 24 மணிநேர துரித இலக்க சேவை ஊடாக தகவல்களை வழங்க முடியும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.