ஆசிரியர் - அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு: மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கை பாதிப்பு !


ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்றைய தினம் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவு குறைவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைக்கு வருகை வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவான நிலையிலேயே இருந்துள்ளதாகவும், பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிச்சென்றுள்ளதைக் காணமுடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில பாடசாலைகளில் இன்றைய தினம் சில ஆசிரியர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் கல்வித்திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.