பாடசாலைகளில் ஆசிரிய பணிக்கென இணைக்கப்பட்டு ஆசிரிய பணி புரிந்துவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பட்டதாரிகள் ஒன்றியம் விடுக்கும் வேண்டுகோள் !





எதிர் வருகின்ற 2024.06.26 ம் திகதி இலங்கை அதிபர் ஆசிரியர் சங்கங்கள் சம்பள உயர்வு குறித்து அன்றைய நாள் சுகவீன பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இருப்பினும் பாடசாலைகளில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பாடசாலைகளிலே பணியாற்றுகின்றனர். அதன்படி இப்போராட்டம் நமக்கானதல்ல. இலங்கையில் உள்ள எந்த ஒரு ஆசிரியர் சங்கங்களோ அதிபர் சங்கங்களோ எமது நியாயமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவில்லை குரல் கொடுக்கவில்லை.

பல்வேறுபட்ட இடர்களுடன் கடந்த (10/06/2024) அன்று கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் எமது பாடசாலைகளில் ஆசிரிய பணி புரிந்துவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இன்னல்களுக்கு உட்பட்டு வைத்திய சிகிச்சைகளை பெற்று வருகின்ற நிலையிலும் இன்றுவரை எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், எமது நியமனம் சார்ந்தும் சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்து கொழும்பு கோட்டைக்கு முன்னால் இடம்பெற்று வருகிறது!
“பாடசாலை சார்ந்த அரச உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக” எந்த குரலும் எழுப்பாத இவர்களின் போராட்டத்திற்கு எமது ஆதரவை வழங்க முடியாது!

அதே சமயம் இன்று 16வது நாளாக கொழும்பு புகையிரத கோட்டை நிலையம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வருகின்றமை என்பதும், அபிவிருத்தி உத்தியாகத்தர்களுக்காக அதிபர், ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுக்காமை போன்ற காரணிகளால் நாளைய போராட்டத்திற்க்கு வலு சேர்க்க தமது ஆதரவை வழங்க போவதில்லை என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே அன்றைய நாள் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலையில் ஆசிரிய பாணி புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் பாடசாலைக்கு சென்று “மாணவர்களது கல்வி நிலையின் பாதிப்பை தவிர்த்து”செயற்படுமாறு அன்போடு வேண்டுகின்றோம்!


தகவல்
பட்டதாரி ஒன்றியம்,
இலங்கை.