ஆசிரியர் - அதிபர் போராட்டம் நாளையும் தொடரும் !


கொழும்பு லோட்டஸ் வீதியில் தமது போராட்டம் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையும் (27) ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையுடன், ஆசிரியர்-அதிபர்கள் ஒன்றிணைந்த குழு இன்று (26) கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றினால் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்து.