காத்தான்குடியில் வேன் விபத்து : காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி !



பொலன்னறுவை இருந்து கல்முனை நோக்கி பயணித்த வேன் ஒன்று மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி வழியாக பயணித்து வந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து காத்தான்குடி பிரதான வீதி நகர வரவேற்பு பதாதை அருகில் வீதியை விட்டு விலகி வீதியின் நடுவே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.20 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வேனில் சிறுவர்கள் உள்ளடங்களாக சுமார் 10 பேர் ஆசனத்தில் அமர்ந்து வந்துள்ளதுடன் சாரதி உட்பட முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த மேலும் ஒருவர் விபத்தின் போது காயங்களுக்குள்ளாகி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் காத்தானகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.