மட்டக்களப்பில் குறைந்த வருமானம் பெறும் நடுத்தர குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு 43.75 மில்லியன் ரூபா நிதி உதவி !


வீடமைப்பு நிர்மானத்துரை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் தேசிய வீடமைப்பு அவிருத்தி அதிகார சபையின் ஊடாக ‘சேவா அபிமானி’ அரச ஊழியர்களுக்கான விசேட கடன் திட்டம் மற்றும் ‘செமட நிவாச’ தேசிய வேலை திட்டத்தின் குறைந்த வருமானம் பெறுகின்றன நடுத்தர குடும்பங்களுக்கான வீடு கட்டுமான பணிக்கான வீட்டுக்கடன் நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றன.

வீடமைப்பு நிர்மாணத்துரை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரசன்ன ரணதுங்க அமைச்சரின் சிபாரிசின் கீழ் அமைச்சர்களின் முன்மொழிவுக்கு அமைய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில். குறைந்த வருமானம் பெறுகின்றன நடுத்தர குடும்பங்களுக்கான வீடு கட்டுமான பணிக்கான வீட்டுக்கடன் நிதி உதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கப்படுகின்றன.

இதற்கு அமைய இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சிபாரிசுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் முதல் கட்டமாக 11 பேருக்கான 43.75 மில்லியன் ரூபா காசோலைகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஷ் கரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைத்தார்

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன்,விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அலுவலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.