போலி ஆவணம் தயாரித்த 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் கைது !


துலாவெலிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று தொடர்பான தரவுகளை தகவல் குறிப்பேட்டில் மாற்றி போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெப்பித்திக்கொல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது, இவர்கள் இருவரும், துலாவெலிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல் குறிப்பேட்டில் உள்ள பதிவுகளை மாற்றி அதற்கமைய போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர் .