மீகஹாகிவுல பிரதேசத்தில் இரு தரப்பு பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 3 பெண்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூன்று பெண்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு பெண் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன் விரோதம் காரணமாக இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.