(சித்தா)
36 வருட காலம் கல்விப் பணியாற்றிய செல்லத்துரை திவ்யராஜ் பட்டிருப்பு வலயக் கணினி வள நிலையத்தில் 18 வருடம் முகாமையாளராகப் பணியாற்றி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.02.2024) ஓய்வு பெறுகின்றார்.
27 வருட காலம் கல்வி பணியாற்றிய கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரன் கல்குடா வலயக் கணினி வள நிலையத்தில் 17 வருடம் முகாமையாளராகப் பணியாற்றி கடந்த 31.03.2023 ஓய்வு பெற்றார்.
இவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கணினி வளநிலைய கல்விசார் அலுவலர்களால் 13.02.2024 திகதி பட்டிருப்பு கணினி வள நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.