தனிப்பட்ட தகராறால் ஒருவர் அடித்துக் கொ லை!



தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் பொல்லால் அடித்து கொல்லப்பட்டார்.

இக்கொலை நேற்று (12) சிறிபாகம - தெற்கு மல்கெல்ல - தவனாவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மல்வத்தை - இலுக்வத்தை - கிலிமலை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய 30 வயதுடைய நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.