கொழும்பு BMICHக்கு முன்னால் விளம்பர பலகை உடைந்து வீதியில் வீழ்ந்தது!



பலத்த காற்றுடனான கன மழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு (BMICH) முன்னால் உள்ள பெரிய விளம்பர பலகையொன்று சற்று முன்னர் உடைந்து வீதியில் விழுந்துள்ளது.

இந்த விளம்பர பலகை வீதியை மறித்தவாறு விழுந்ததால் கொழும்பு பெளத்தாலோக வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.