பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை கைவிட வேண்டும்- ஐ.நா



இலங்கையின் வடக்கு கிழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது மனித உரிமைகளை மீறும் சட்டம் பயன்படுத்தப்படுவதை நிறுத்தி வைப்பது குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு மாறானது எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிட வேண்டும் எனவும் ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.