விசாரணைக்காக சென்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்!


கண்டி - கம்பளை பிரதேசத்தில் தற்கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்காக சென்ற பெண் பொலிஸ் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் கலஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் தெல்தோட்டை பிரதேசத்தில் 43 வயது இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான விசாரணை ஒன்றுக்கு சென்றிருந்தபோதே குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.