
(எம்.எம்.றம்ஸீன்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள 13 பிரதேச வைத்தியசாலைகளினதும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு அந்த வைத்தியசாலைகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராக்கள் வலையமைப்பின் ஊடாக பிராந்திய பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த வலையமைப்பினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எம்.முஜீப் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் எம்.பீ.அப்துல் வாஜித், பிரிவுத் தலைவர்கள், கணக்காளர் உள்ளிட்ட பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.