வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படுதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் அனைத்து சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய 982 ஆண் கைதிகள் மற்றும் 6 பெண் கைதிகள் 988 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.