தம்பிலுவில் மத்திய சந்தை கட்டிடத்தில் திருக்கோவில் பிரதேச சபையால் உடற் பயிற்சி கூடம் Gym திறந்து வைப்பு

தம்பிலுவில் மத்திய சந்தையின் மேற் தளத்தில் உடற்பயிற்சி கூடம் (  Gym center ) LDSP  செயற்திட்டத்தில்  PT-1(2nd half) வேலைத்திட்டத்தின் கீழ்  திருக்கோவில் பிரதேச சபையால் திறந்து வைக்கப்பட்டுள்ளது .

அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு இவ் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் .

திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் வி.கமலராஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச சபை பொறியியலாளர் , செயலாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் , உத்தியோகத்தர்கள்  பலரும் கலந்துகொண்டனர் 

இணைந்து கொள்ளவதற்கு  பிரதேச சபையை தொடர்பு கொள்ளவும்     தகவல்களுக்கு - 0672030900