கந்தளாய், லைட் வீதி, பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியான காலகட்டத்தில் டிசல் மற்றும் பெற்றோல் போன்ற எரிபொருள் பெற்றுத் தருவதாக கூறி பல பேர்களிடம் 85 இலட்சம் ரூபா வரை பணத்தினை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணம் செலுத்தியவர்களினால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் கடந்த ஓகஸ்ட மாதம் 8 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், குறித்த நபருக்கெதிராக கந்தளாய் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்குகளில் குற்றம் நீருபிக்கப்பட்டதால் நீதிவான் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.