எதிர்வரும் ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள மின்சாரக் கட்டணம் 69 சதவீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார சபை 130 சதவீத கட்டண உயர்வை கோரிய போதிலும், குறைந்த மின்சார பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.