SWDO அமைப்பினரால் சாதாரண தர மாணவர்களுக்கான பயிற்சி செயலட்டைக்கான திட்டத்திற்கு நிதியுதவி

மட்டு மத்தி வலயத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க தரம் 11 சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி செயலட்டைக்கான திட்டத்திற்கு கணிசமான நிதிப்பங்களிப்பு SWDO அளிக்கப்பட்டது. 

இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று கோட்டக்கல்வி அதிகாரி A.மெளஜூத் அவர்களின் தலைமையில் பிரதி வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் SWDO EVRன் தலைவர் முபாஸ்தீன், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் சகிதம் கலந்து கொண்டதுடன் ஏறாவூர் கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கான செயலட்டைகள் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது கோட்டக்கல்வி அதிகாரி A.மெளஜூத் கூறுகையில் எமது சமூக நலன் அபிவிருத்தி ஒன்றியம் கடந்த கால மற்றும் தற்கால சமூக சேவையில் முன்னனியாக திகழும் அமைப்பு என நன்றி பாராட்டினார்.