(ஜே.எப்.காமிலா பேகம்)
பொதுத் தேர்தல் இறுதி முடிவுகளை ஓகஸ்ட் 6ஆம் திகதி இரவு 8 மணிக்கு அறிவிக்க முடியும் என நம்புவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களை இணைத்து இன்று வெள்ளிக்கிழமை மொனராகலை திருத்துவக் கல்லூரியில் தேர்தல் ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை செயற்பாட்டின் பின் ஊடகங்களுக்குப் பேசிய அவர் மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டார்.