மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் கொரோனா தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகைகளை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதில் ஒரு அங்கமாக கடந்த வாரம் தொடக்கம் கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமுக சேவையாளர்களுக்கு கொரோனா நோயின் தாக்கம் தொடர்பிலும் தற்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் குறிப்பாக மரண வீடுகளிலும் நிவாரணங்கள் பெறும்போதும் மிகவும் எச்சரிக்கையுடன் பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைவாக பொதுமக்கள் செயற்படவேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ். இளங்கோ மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.