TNA இன் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் - மாவை

(பாறுக் ஷிஹான்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை அடையாளப்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை(11) மாலை 7 மணியளவில் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில். அம்பாறை மாவட்ட வேட்பாளர் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று இடம்பெறும் மத்திய குழுக் கூட்டத்தில் தமிழரசு கட்சியின் பங்காளிக் கட்சிகளான டெலோ இயக்கம், புளொட் இயக்கம் ஆகியவற்றில் வேட்பாளர் தெரிவு மற்றும் இறுதி தீர்மானம் இன்று திருமலை மாவட்டத்தில் இடம்பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்க படும் எனவும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் அவர்களது பலத்தை ஒற்றுமையாக நின்று தங்களின் இனவிடுதலை தமிழ் மக்கள் விடுதலை தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டுமென்று அரசியல் தீர்வு உட்பட்ட இவ்வாறான அரசியல் முன்னெடுப்புகளை முன்னெடுக்கப்படுவதற்து ஏற்ற தேர்தல் அறிக்கை ஒன்றை நாளை நாங்கள் கூடி தீர்மானிக்க இருக்கின்றோம்.

போர்க் காலத்தில் கூட தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தி இருக்கின்றனர். நிலங்கள் அபகரிக்கப்பட்டுவது, தேவைகள் நிறைவேற்றப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் இயலாமைகள் இவற்றையெல்லாம் நாங்கள் மனதில் கொண்டு இது சார்ந்த விடயங்களில் இந்த அம்பாறை மாவட்டத்துககு முன்னுரிமை அளித்து தமிழர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஒற்றுமையுடன் என்று செயற்படுவோமானால் இரண்டு பிரதிநிதிகள் கூட பெற்றுக் கொள்ளலாம்.

அம்பாறை மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தேசியப்பட்டியல் பிரதியை நிச்சயம் தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள். இந்த கோரிக்கை நாளைய கூட்டத்தில் பேசப்பட்டு பரிசீலிக்கப்படும் வலியுறுத்தியிருந்தார் .

நாங்கள் ஜனநாயகம் இல்லாத காலத்தில் கூட தேர்தலில் ஈடுபட்டிருக்கின்றோம் இப்பொழுது ஓரளவு ஜனநாயக சூழ்நிலை நிலவி வருகின்ற போதும் இப்போது பல குழுவினர் வெளியே வந்த தேர்தலில் ஈடுபடுகிறார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் புதிதாக பல கட்சிகள் அவர்கள் புதிய சின்னத்தில் களமிறங்குகின்றனர் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயம்.அவர்களது பின்னணி அவர்களுக்குப் பின்னால் அரசாங்கம் உள்ளதா அல்லது போர்க்காலத்தில் அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள் ,அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு முயற்சிப்பவர்கள் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துகளை குழப்பகரமான தெரிவித்து வருகின்ற கருத்துடையவர்கள் பின்னணி என்பது மக்கள் அறிவார்கள் அவர்களை மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அவர்களும் போர்க்காலத்தில் அரசுடன் இணைந்து சேர்ந்தவர்களும் எங்களைப் பற்றி விமர்சிக்க தகுதியற்றவர்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தப்பட்டது எங்களுக்கு மிகுந்த மனவேதனையை தருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் அரசுகள் முஸ்லிம் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமை குறித்த விடையத்தை பயன்படுத்தி நிறைவேற்ற தவறி வருகின்றது என தெரிவித்தார்.