சனி ,ஞாயிறு இரு தினங்களிலும் மின்சாரத் தடை

திருகோணமலை மாவட்டம் பூராவும், இன்று  சனிக்கிழமையும் (16) ஞாயிற்றுக்கிழமையும் (17) மின்சாரம் தடைப்படுமென, இலங்கை மின்சார சபையின் திருகோணமலை மாவட்ட பிரதான பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.


பிரதான மின் இணைப்பில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளவுள்ளதால், குறித்த இரு தினங்களிலும்  காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை, மின்சாரம் தடைப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.