உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும்.
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரையின் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். விளம்பி என்ற பெயரை கொண்டு பிறக்கின்ற இந்த புதுவருடம் அமைகிறது.
புதுவருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று காலை 7 மணிக்கு பிறக்கிறது.திருகணித பஞ்சாங்கத்தின் படி காலை 8.13க்கு பிறக்கிறது.
இதன்படி புண்ணிய காலம் அதிகாலை 3 மணியில் இருந்து 11 மணி வரை என கணிப்பிடப்பட்டிருக்கின்றது.
இப் புத்தாண்டுப் பிறப்பில் அனைவரும் நல் எண்ணம் கொண்டு நற்செயல்களை ஆற்றி நம் நாடு சிறக்க பணிபுரிவோம் எனக் கூறி எங்களது வாசகர்களுக்கும் உலக வாழ் அனைத்து தமிழ் சிங்கள மக்களுக்கும் Battinews குடும்பம் சார்பாக இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்