விபத்தில் ஒருவர், சம்பவ இடத்தில் பலி ; சாரதி கைது

ஓட்டமாவடி, தியாவட்டவான் பிரதேசத்தில் மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர், சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையைச் சேர்ந்த முஹம்மது அசனார் முஹம்மது அபூபக்கர் (வயது 86) என்பவரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.

சைக்கிளை உருட்டிச் சென்றுகொண்டிருந்த இவரை, சிறிய வாகனமொன்று மோதியுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தை அடுத்து, குறித்த வாகனச் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினர்.