இலங்கை தொழிநுட்பக் கல்விச் சேவையின் பாராட்டு விழா

இலங்கையின் பதவிநிலைசார் (Staff Grade) நிறைவேற்றுத்தர (Executive Service) பதவிகளுள் ஒன்றான இலங்கை தொழிநுட்பக் கல்விச் சேவையின் (Sri Lanka Technical Education Service) சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு,  சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் 2017 – 04 – 10 ம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வினை பிரமாண்டமான முறையில் SLTES Welfare Forum ஏற்பாடு செய்திருந்தது.


இந்த நிகழ்வில் சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரியின் பிரதி அதிபர் பொறியியலாளர் U. அம்ஸா, அதிபர்  MM. ஹசன், அக்கரைப்பற்றுத் தொழிநுட்பக் கல்லூரியின் அதிபர்  A. ஜனூர்டீன், திருகோணமலை தொழிநுட்பக் கல்லூரியின் அதிபர்   K. ப்ரேமரஞ்சன், மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களான   K. சுகுமாரன்,   V. விமலராஜா,   M. சோமசூரியம்,  T. பாஸ்கரராஜா ஹாடி தொழினுட்பவியல் கல்லூரியின் மேலதிக பணிப்பாளர்   MM. அப்துல் கையூம் ஆகியோர் தங்களது நீண்ட கால சேவைக்காக பாராட்டப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஓய்வு பெற்றச் செல்லவுள்ள மட்டக்களப்பு தொழினுட்பக் கல்லூரியின் அதிபர்   T. ரவிச்சந்திரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையின் முதல் தர உத்தியோகத்தரும் ஹாடி தொழினுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளரும் தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய முதல்வருமான   A.L. பதுர்தீன் அவர்கள் நீண்ட காலம் சிறந்த சேவையாற்றி விட்டு விரைவில் ஓய்வு நிலையை அடைய இருப்பதை முன்னிட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரின் சார்பிலும் நினைவுச் சின்னம், மற்றும் விஷேட நினைவுச் சின்னம் என்பன வழங்கி மகுடம் சூட்டப்பட்டதோடு பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

SLTES Welfare Forum அமைப்பின் தலைவர் SHM. சல்மான் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவினை அமைப்பின் அங்கத்தவர்களான N. நஹீம், SUM. இம்தியாஸ், MBM. சிறாஜ், S. உமேஷ்காந்த், MM. ஹாமிம், SLM. நஸ்வர், A. மாஹிர், MM. ஷபான், MBA. பாயிஸ், S. ப்ரவீன், M. ரமணீதரன், S. சுதர்ஷன், FHA. அம்ஜாட், MA. நசீர், SP. தர்மேந்திரா, MM. சியாத், S. சிவராஜ், R. ஜனார்த்தன், S. சனீஜ், சுபாஜினி தீனேஷ், MSM. றாபி, ALM.  றியாஸ் ஆகியோர் திறம்பட ஒழுங்கு செய்திருந்தனர்.