விபத்துக்களை குறைப்பதற்கு 32 U வளைவுகள் 6 ஆக குறைப்பு !

அக்கரைப்பற்று மாநகரசபைப் பிரதான வீதியில் காணப்பட்ட 32 யு வளைவுகள் 06ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
மேற்படி வீதியில் இடம்பெறும் விபத்துகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த வளைவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது விபத்துகளும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இது இவ்வாறிருக்க, வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளினாலும் விபத்துகள் சம்பவிக்கின்றன.


இந்த மாடுகள் வீதிகளில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் நடமாடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.