(துறையூர் தாஸன்)

திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்(ரொபின்),கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராஜா,சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீந்தராஜா,மூத்த கவிஞர் மு.சடாட்சரன், எழுத்தாளர் அரசரெத்தினம் போன்றோர் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
பாண்டிருப்பு ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.சபாரெத்தினம் குருக்களின் ஆசியுடன் எழுத்தாளர் அரசரெத்தினம் விருந்தின் வெளியீட்டுரையை வெளியீட்டார்.
சிற்றிதழாசிரியர் செ.துஜியந்தன் அவர்களால் விருந்தின் முதல் பிரதி திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்(ரொபின்) மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராஜா அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ஏனைய பிரதிகள் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்(ரொபின்) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழை, தமிழ் இனத்தினை அழிக்க வேண்டும் என ஒரு சாரார் விழிப்பாய் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றர் ஆகவே நாங்கள் எட்டுத் திசைகளுக்கும் சென்று தழிழையும் தமிழ்ப் பண்பாடுகளையும் கலை கலாசாரங்களையும், முழுமையான மொழி தமிழாக இருக்கின்றமையால் அந்தத் தமிழை பாதுகாக்கும் கடமைப்பாடு எங்களிடம் இருக்கின்றதென்றும் விசேடமாக வடகிழக்கிலே வாழ்கின்ற எமது தமிழர்கள் கலாசார பாரம்பரியங்களை பின்பற்ற வேண்டுமென்றும் எமது கலை கலாசாரங்கள் மேலைத்தேய கலை கலாசாரங்களினால் தமிழர்களின் பாரம்பரியமும் பண்பாடும் சிதறடிக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலை நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்றும் அதனை இப்படியான சஞ்சிகை மற்றும் நூல்களுக்கூடாகவே விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுத்து நிறுத்துவதுடன் செயற்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
மேலும் கலை கலாசார பண்பாட்டுப் பாரம்பரிய விடயங்களையும் தமிழர்களின் ஆதிகால வரலாற்றுச் சுவடுகளை எமது வருங்கால சந்ததிகளுக்காக சஞ்சிகைகள் மற்றும் சிற்றிதழ்களுக்கூடாகவே பதிவு செய்யப்பட வேண்டுமெனவும் கல்முனை பிரதேசத்தை ஆட்சி செய்தது தமிழ் மன்னனாக இருந்தும் ஆனால் அது கூட திரிவுபடுத்தப்பட்டு சொல்லப்படுகின்ற நிலைதான் இப்போது காணப்படுகின்றதென்றும் இவ்வாறு திரிவுபடுத்தப்படுகின்ற விடயங்களை சிற்றிதழ்கள் இனிவருங் காலங்களில் தெட்;டத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டுமென்றும் இவ்வாறான சஞ்சிகைகளை எமது பிள்ளைகளுக்கு வாசிக்கக் கொடுத்து எமது வருங்கால சந்ததியினருக்கு எமது பாரம்பரிய வரலாற்றுத் தடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டுமென திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்(ரொபின்) தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழர்களின் பாடப் புத்தகங்களில் பல வரலாற்றுத் தடயங்கள் பதிவு செய்யப்படாமல் இருட்டடிக்கப்படுவதுடன் தமிழர்களின் ஆலய வழிபாட்டுத் தலங்கள் மறைக்கப்பட்டு இல்லாமலாக்கப்பட்டு வருகின்றதென்றும் இவ்வாறான பல செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் செயல் வடிவம் பெறுபனவாகவுள்ளன என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராஜா தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
துறை சார் நிபுணர்கள்,எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.