மண்முனைக் கண்ணகி தொடர்பில் எழுப்பப்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்


(ஆரையம்பதி. க.சபாரெத்தினம்)

வெல்லவூர் கோபால் என்பவரால் battinews.com வலைத்தளதம் ஊடாக 28.06.2016 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆக்கத்திற்கான விளக்கங்கள்.
முதலில் தாழங்குடாவிற்கும் மண்முனைக்குமான இட வேறுபாடுகளை நிறுவுதல் தொடர்பான விளக்கங்கள் .


1. ஆய்வு என்ற பதத்தை விடுத்துஇ நம்முன்னால் இடம்பெறும் நிஜங்களையும் இட அமைப்பையும் அவற்றிக்கு அரச பொதுநிருவாக அமைச்சினால் அங்கீகரித்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள எல்லைஇ விஸ்தீரணம் என்பவற்றினையும் அவற்றின் கிடைப் படத்துடன் ஓப்பிட்டுப்பார்க்கும் போது (படம் இணைக்கப்பட்டுளது) தாழங்குடா என்ற சிறு கிராமமும் மண்ணேறுமுனை என்றிருந்து பின் நாளில் மண்முனை என்றாகிய கிராமமும் இருவெவ்வேறு இடங்கள் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.  இவை அரசினால் அங்கிகரிக்கப்பட்ட நிலப்பிரிவுகள். அப்படியிருக்கையில் தாழங்குடா என்ற ஊரை மையப்படுத்தி அதற்கு முன்னுரிமை கொடுப்பதோடு அல்லாமல் அவ் ஊரின் முதலாம் குறிச்சிதான் மண்முனைக் கிராமம் என்று வாதாட முன்னிப்பது எவ்விதத்தில் சரியானதாக அமையும்? வெல்லாவெளியில் பிறந்த திரு. கோபால் அவா்கள் இந்த விடயத்தில் உண்மைகளை உதாசீனம் செய்வதேன்? இதற்கு மறைமுக காரணங்கள் ஏதும் உண்டா? அதுமட்டுமல்லாமல் இக்கிராமத்தின் தற்போதைய நிலையை யாரும் பிரித்து நோக்கினால் அதனை சிறுபிள்ளைத்தனம் என்று அவா் நகையாடுவதும் விந்தையான விவகாரமே.

2. தாளங்குடாவும் மண்முனையும் வேறு வேறு கிராமங்கள் என்று கூறுவதற்கும் மண்முனை கி.பி 4 ஆம் நுாற்றாண்டு தொடக்கம் காடழிக்கப்பட்டதோர் சிற்றரசு நகரமாக திகழ்ந்த தென்பதற்கும் பின்வரும் சான்றுகளை முன் நிறுத்துகின்றேன்.
(அ) மண்முனை என்ற கிராமத்தின் இடப்பெயராலே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேச செயலக பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
(ஆ) அரச அங்கீகாரம் பெற்ற மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கிடைப்படத்தில் ஓவ்வொரு ஊரும் வேறு வேறாக எல்லை நிா்ணையம் செய்யப்பட்டிருப்பதுஇ
(இ) மட்டக்களப்பு மான்மீகம் மட்டக்களப்பு தமிழகம் போன்ற நுால்கள் மற்றும் கிழக்கிலங்கை கண்ணகி வழிபாடு பற்றி சில எழுந்த நுால்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கங்கள்
(ஈ) இங்கு வாழும் மக்களின் தபால் விலாசம்இ வாக்காளர் இடாப்பு முதலியன.

3. வெல்லாவூர் கோபால் குறிப்பிடுவது போல் தாழங்குடாவின் 1 ஆம் குறிச்சியே மண்முனை என்றிருப்பின்இ பினவரும் சந்தேகங்களுக்கு விடை தேவை.
(அ) மண்முனையை ஆளுமைப்படுத்திய தலைக்கிராமமாக தாழங்குடா நகர அந்தஸ்துடன் இருந்திருக்க வேண்டும்.
(ஆ) மண்முனை என்ற குறியீட்டுப்பொயரால் புர்வீக அரசாட்சியை குறிப்பதற்கு தற்போது அதன் சுவட்டை பின்பற்றி ஏனைய அயல் பிரதேசங்களுக்கு மண்முனை வடக்குஇ மண்முனை மேற்குஇ மண்முனை தென்எருவில் பற்று என்றெல்லாம் இடப்பெயர்கள் தோன்றும் நிலை ஏற்பட்டிருக்காது. மாறாக தாழங்குடா வடக்குஇ தாழங்குடா மேற்குஇ தாழங்குடா தென்எருவில் பற்று  என்றல்லவா பெயா்கள் இடம்பெற்றிருக்கும். ஆகவே வெல்லாவுர்கோபால் அவா்களின் தாழங்குடா மண்முனை என்பன ஓரே நிலப்பரப்பு அல்லது தாழங்குடாவின் 1 ஆம் குறிச்சிதான மண்முனை என்பது வெற்றுப்பேச்சு.

4. மேற்குறித்த விடயத்தை வலுசோ்க்கும் முகமாக திரு. கோபால் அவா்கள் முன்வைக்கும் மற்றோர் சான்று.
'கூடவே எருவில்இ பெரியநீலாவணைஇ கல்முனைஇ சம்மாந்துறைஇ அக்கரைப்பற்றுஇ பாணமை போன்ற பகுதிகளில் வாழும் தொழில்கூற்றுச் சமூகங்கள் பற்றிய ஆய்வுகளிலும் அவர்களில் பெரும்பாலோர் தங்களை தாழங்குடா வயிற்றுவாரெனவும் உலகநாச்சி காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து தாங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல் படுத்தியுள்ளனர். '
இக்கூற்றின் மூலம் ஊகிக்க முடிவதெல்லாம்.
(அ) சிறைக்குடிகளாக(தொழில்கூற்றுச் சமூகம்) இளவரசி உலகநாச்சி இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சமூகத்தை குடியிருத்திய இடமே தாழங்குடா என்பதும்.
(ஆ) இவ் தொழில்கூற்றுச் சமூகமே இளவரசிக்கான தொழும்புப் பணிகளை ஆற்றி வந்தனர் என்பதும்.
(இ)அவ்வாறான தொழில்கூற்றுச் சமூகம் குடியமர்த்தப்பட்ட பகுதியில் உலகநாச்சி அரண்மனை அமைத்திருப்பாளா? அது அரச கௌரவத்திற்கு அடுக்காகுமா ? என்பதும்
(ஈ)இம் மக்கள் தம்பணி தொடர்பாக நேரடியாக குறித்த நேரத்தில் அரண்மனையை சென்றடைவதற்காக அமைக்கப்பட்ட பாதையே திரு.கோபால் அவா்கள் சுட்டிக்காட்டும் மளிகையடித்தெருவாக இருக்கலாம் என்பதும்.

5. 'மாளிகை அமைந்த இடம் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டதல்ல என்பது உண்மையாயினும் கள ஆய்வில் பெறப்படும் தகவல்களை ஆய்வாளனால் புறந்தள்ளமுடியாது.' என்ற திரு.கோபாலின் கூற்று தொடர்பாகஇ
(அ) ஓரு அரசியின் இராசதானி அமைவுப்பட்டிருந்ததாக கூறப்படும் இடத்தில் அற்ப சொற்ப அழிபாட்டு சின்னங்களாவது கண்டெடுக்கப்படாமலா போகும்? தாழங்குடாவைப்பற்றி திரு.கோபாலுக்கு மிகுதியாக கூறிய அவ்வூர்மக்கள் தடயங்களை பாதுகாப்பாக வைத்திருக்க தவறிது ஏன்?
(ஆ) மாளிகை என்று பொதுமக்களால் குறிப்பிடும் இடத்தில் அரச தேவை சார்ந்த வேறறோரு கட்டிடம் அமைந்திருக்கலாம் அல்லது அந்த 'பெரிய வளவு' என்றழைக்கப்படும் இடமே  அன்று குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றிய இடமாக கூட இருந்திருக்கலாம். அதனால்தானோ இன்னமும் மக்கள் அமானுன்ய சம்பவத்திற்கான இடம் என்று மதித்து  வருகின்றனா்.
(இ)ஐந்து குருடர்கள் கூட யானையைக்கண்டார்கள். அவா்கள் ஒவ்வொருவரும் அவா்கன் இயல்புகளுக்கேற்ப நிரூபித்தார்கள் ஆனால் உண்மை அதுவாக அமைந்ததா ? ஆய்வு  பற்றி தத்துவார்ந்த விளகக்கங்களை தெரிவிக்கும் வித்தகரான திரு.கோபால் அவா்கள் இந்த வகையில் ஓர் ஏமாளியாக மாறுவது சரியாகுமா?

6. ஆய்வாளர் திரு.கோபால் அவா்களின் ஆக்கத்தில் அமைந்த மற்றோரு பந்தியில் 'இதில் பேழை வந்த முறையில் மூனாக்கானா ஐயா அவர்களால் தரப்படும் தகவல்களும் ........' என்று தொடரும் பந்தி பற்றிஇ
அடியேனால் முன்வைக்கப்படும் தகவலுக்கும் மூனா கானா ஐயா அவா்களால் தரப்படும் தகவல்களுக்கும் இடையில்  முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பது உண்மையே காலக்கணிப்பில்  முன்னையவரது 150 வருடங்களுக்கு மட்டுப்படுத்தபட பின்னையவா் சில நுாற்றாண்டுகள் எனக்குறிப்பிடப்படுவதும் வாஸ்தவமே. இவ்வாறான முரண்பாடுகள் இனம்காணப்படுகின்ற போதிலும்  திரு.கோபால் அவா்கள் ஆழ ஊடுருவித் தாக்குதல் மேறகொள்வது போல பின்வருமாறு தீர்ப்பளிக்கின்றார்.
'எனினும் இங்கு சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போதுமான காரணங்களைக்கொண்டு ஆரையம்பதி கண்ணகி வழிபாடு மண்முனைக் கண்ணகியின் தொடர்ச்சியே என்பதுவும் அதுவே மஞ்சந்தொடுவாய்வரையும் வியாபித்துள்ளது என்பதுவும் தாளங்குடாக் கண்ணகி வழிபாடும் மண்முனைக் கண்ணகியின் வழிபாடாகவே கொள்ளப்படும் என்பதுவும் நமது ஆய்வின் வெளிப்பாடாகவே அமையும்.'
மேற்குறித்த திரு.கோபாலின் தீர்ப்பின் மூலம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது யாதெனில்.
(அ) ஆய்வாளர் ஓர் நீதிபதியாக செயல்படுவது முறையாகுமா?
(ஆ) இது பற்றி கோபால் அவா்கள் தமது முன்னுரையில் வெழுத்து வாங்கியிருக்கும் அறிஞர்கள் ஈ.எச். கார்இ தேள்டன் எட்கார் மற்றும் தமிழக ஆய்வாளர் திரு. ஆ.சுப்பிரமணியம் ஆகியோரின் அறிவுரைகளை பின்பற்ற வில்லையா?
(இ) உண்மை தெளிந்த பின்னும் இத்தனை முயற்சிகள் எடுத்து தாளங்குடாவையே துக்கிப்பிடிப்பதற்கு வேறேதும் காரணங்கள் மறைந்திருக்குமா ?
என்னும் இவைகள் தான்

7.  இவ்விவகாரத்தை ஓர் உண்மை ஆய்வாளனாக இருந்து ஆற்றி இருக்க வேண்டிய பணிகள் இவைகளாத்தான் இருந்திருக்க வேண்டும்.
(அ) சர்சைக்குரிய சாராரை களத்திற்கு சென்று விசாரித்து அறிந்திருக்கலாம்.
(ஆ) வேண்டுமானால் இருசாராரையும் தனித்தனியாக அல்லது இணைத்து கலந்து பேசி உண்மைத்தன்மையை வரவழைத்து இருக்கலாம்.
(இ) இடம்பெறும் பேச்சுவார்த்தையில் வெளிப்படும் கருத்துக்களின் அடிப்படையில் உண்மை எது பொய் எது என்று ஊகித்தறிந்திருக்கலாம்.
(ஈ) ஆலயங்கள் பேராலயங்கள் என்பவற்றை நிருவகித்துவரும் இருபக்க அறங்காவலா்சபையினது கருத்துக்களை அல்லது அவ் ஆலயங்களில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வரும்
ஆவணங்களை ஆய்வு செய்து உண்மைநிலையை எட்டியிருக்கலாம். இவை எதுவும் செய்யாமல் வெறுமனே தாழங்குடாவை சிற்றரசு அமைந்த இடம் அதுவே மண்முனை என்ற இரசதானியை கட்டிக்காக்கும் கோட்டை என்றும் மண்முனைதான் தாழங்குடாஇ தாழங்குடாதான் மண்முனை இவற்றை பிரித்துவிட முடியாது என்றும் மார்தட்டுவது எங்ஙனம் ஆய்வாகலாம்.

8. வலிந்து இழுக்க முனையவில்லை
புராதன இடங்களை ஆய்வு செய்து நிறுவது அத்தனை சுலபமான விடயமல்ல. அதற்கு பல ஆதாரங்கள்இ சான்றுகள்இ இடிபாட்டு எச்சங்கள் மக்கள் வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட பொருட்கள் என்பன இன்றியமையாததாகும். அத்தோடு சிறந்த உத்திப்பயன்பாடும் வேண்டற்பாலதே. எல்லாவற்றிக்கும் மேலாக ஆய்வில நடுநிலைத்தன்மையும் ஊகித்தறியும் திறனும் அவசியம். ஆதாரபுர்வமாக நிறுவப்பட்ட சில ஆய்வுகள் கூட வேறு சிலரின் சந்தேகங்கள்இ எதிர்ப்புக்கள்இ முரண்பாடுகள் காரணமாக மீளாய்வு செய்யப்பட வேண்டி சுழலுக்குள் தள்ளப்பட்டுள்ளன.
எது எவ்வாறு இருப்பினும் ஓர் ஆய்வாளா் என தன்னைக் கூறிக்கொள்பவன் இவ்வாறான எதிர்வினாக்கள் தொடுப்பவா் குறித்து ஆத்திரமடைவோ உணா்ச்சி புர்வமாக முடிவெடுத்லோ கூடாது. வெல்லாவுர் கோபால் அவா்கள் மேற்படி தலைப்பில் 28.06.2016 அன்று டியவவiநெறள.உழஅ வலையமைப்பில் முன்னைய எனது சந்தேகங்களுக்கு பதிலளித்தால் போன்ற அவரது  அறிக்கையில் யு4 தாளில் ஒன்றே கால் பக்கம் அளவில் ஆய்வு பற்றிய செயன் முறைகுறித்த தத்துவங்களையும் இவற்றை தோற்றுவித்த பிரபலங்களான தேஸ்டன் எட்கார்இ பேராசிரியா்  ஈ.எச். கார் மற்றும தமிழக ஆய்வாளர் சுப்பிரமணியம் பற்றியும் குறிப்பிட்டு இருபக்கங்களை வீணடித்துள்ளார். என்போன்ற சாதாரண மனிதனுக்கோ அல்லது இவ் ஆக்கத்தை படிக்கும் எண்ணற்ற சராசரி மனிதர்களுக்கோ இவ்விளக்கம் அதிகம் பயன்பட வாய்ப்பில்லை. அது மட்டுல்லாமல் இவ்வாறு தத்துவங்களினால் இடத்தை நிரப்பிவிட்டால் அன்பர் கோபாலைப்பற்றி பலர் சிலாகித்து கொள்வதோடு கௌரவத்தோடு இத்தகைய அறிவுத்தகலை தன்னகத்தே கொண்டுள்ளவருடன் முண்டிப்பார்க்க முனையக்கூடாது. என்றெண்ணி ஓதுங்கிவிடச்செய்யவும் ஏற்படுத்தப்படும் ஓர் உத்தி போல தெரிகின்றது. அன்பரே  நீங்கள் குறிப்பிட்டதுபோல எழுத்துத்துறையிலும் ஆய்வுத்துறையிலும் தடம்பதித்தவா்களாகவோ விற்பனர்களாகவோ ஒருபோதும் நாங்கள் நினைப்பதும் இல்லை நடந்துகொள்வதும்  இல்லை. ஆயினுமு் அறிவுக்கும் சிந்தனைக்கும் உட்பட்ட விவகாரங்களில் இடம்பெறும் தவறுகளை என்றுமே சுட்டிக்காட்டாமல் விட்டதும் இல்லை. என்னை நான் எப்போதும் கற்றது கைமண் அளவு என்ற கோலளவையுடன் ஓப்பிட்டே பார்ப்பவன். இதற்கும் சில சமயம் தாங்கள் சான்றும் கேட்க கூடும். என்னோடு நன்கு பழகும் நண்பர்கள் சில கல்விமான்கள் மற்றும் நோ்மையாளா் என்ற சிலரின் வாய்மொழிச்சான்று தவிர வேறென்றும் என்வசம் இல்லை.
கவியரசு கண்ணதாசனின் வரிகளான

நான் கவிஞனுமில்லை
நல்ல ரசிகனுமில்லை
காதலெனும் அசையில்லா
பொம்மையுமில்லை என்பவையே எனது விடயமாகும்.

9. ஓா் விடயத்தை தவறவிட்டுவிட்டேன்
மட்டக்களப்பு மான்மீயத்தில் குறிப்பிட்டதாக முன்னா் என்னால எழுதப்பட்ட கட்டுரையில் உள்ள வரிகள் மாற்றமடைய சுட்டிக்காட்டிய தங்களுக்கு நன்றி கூறுகின்றேன். அது மதிப்புக்குரிய  இலக்கிய கலாநிதி க.தா. செல்வராசகோபால் அவா்களால் எழுதப்பட்ட 'மட்டக்களப்பு மாவட்ட வரலாற்று சுவடுகள்' என்ற புத்தகத்தில் வாசித்த ஞாபகத்திலிருந்தே பெறப்பட்டது.
தவறுகளுக்காக வருந்துகின்றேன். நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது போல் மட்டக்களப்பு வரலாறு என்ற தங்களது நுால் இரண்டாயிரம் பிரதிகள் விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பின்பு அதில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்கள் தவறானது என சுட்டிக்காட்டப்படுவதை ஓர் குறையாக காண்பது வேடிக்கையானது.கவிச்சக்கரவத்தி கம்பராலே எழுதப்பட்ட இராமாயண காவியத்தை 20 ஆம் நுாற்றாண்டில் பல முரண்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி கம்பரசம் என்ற நுாலில் எழுதினார் அறிஞா் அண்ணாத்துரை அவ்வாறான சரஸவதி கடாச்சம்  பெற்ற மகா கவியை விமர்சிக்கும்  போது தங்கள் நுாலில் குறை காண்பதற்காக வேதனைப்படத்தேவையில்லை தேற்றிக்கொள்ளலாம் மனதை.
நன்றி