வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு


மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியொன்று, ஒரே திசையில் பயணித்த சைக்கிளொன்றுடன் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இந்த விபத்து இன்று (15) அதிகாலை 3.10 அளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வாவி வீதி பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.