அத்துடன் அந்த உணவுச்சாலைகளில் இருந்த பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்களும் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் உணவு இன்றி தவிக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து மூன்று உணவுச்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இது விடயமாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது
கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி உணவுச்சாலை ஒன்றில் பெறப்பட்ட உணவுப் பார்சலில் புழு காணப்பட்டதாக மாணவர் ஒருவரால் புகார் செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏறாவூர் பொலிஸாரும், மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகரும் ஞாயிற்றுக்கிழமை குறித்த உணவுச்சாலையை பரிசோதனை செய்து அதனை பூட்டினர்.
பின்னர் இன்று திங்கட்கிழமை அங்கு விஜயம் செய்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் ஏனைய 4 சாலைகளையும் பூட்டினர். செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபையிடமிருந்து அனுமதி பெறுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தும் அந்த அனுமதியை பெறத்தவறிவிட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் பாவனைக்கு உதவாத உணவுகளும் காலாவதியான உணவுகளும் அவர்களால் கைப்பற்றப்பட்டு 5 சாலைகளும் பூட்டப்பட்டன.
இதனை அடுத்து மாணவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பதட்டம் அங்கு நிலவியது. சம்பவத்தைக் கேள்வியுற்று பொலிஸாரும் அங்கு விரைந்தனர். இறுதியில் 10 நாட்களுக்குள் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 3 சாலைகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.